- Home
- Cinema
- ரஜினியை அடிக்கணுமா? எதுக்கு வம்புனு ஹீரோயின் வாய்ப்பை குஷ்பு தூக்கியெறிந்த படம் பற்றி தெரியுமா?
ரஜினியை அடிக்கணுமா? எதுக்கு வம்புனு ஹீரோயின் வாய்ப்பை குஷ்பு தூக்கியெறிந்த படம் பற்றி தெரியுமா?
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை நடிகை குஷ்பு நிராகரித்திருக்கிறார். அதற்கு ஒரே ஒரு காரணம் என்னவென்றால் ரஜினியை அடிப்பது போல் ஒரு காட்சி படத்தில் இருந்ததாம். அது எந்த படம் என்பதை பார்ப்போம்.

Khushbu Rejected Rajini Movie Heroine Role
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த மன்னன் படத்தில் அவருக்கு சரிசமமாக, ஸ்டைலா கெத்தாக ஒரிஜினல் லேடி சூப்பர்ஸ்டார் விஜயசாந்தி நடித்திருந்தார். அந்த கேரக்டரில் அவருக்கு முன்னதாக நடிகை குஷ்பு நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் நடிக்க மறுத்திருக்கிறார். அவருக்கு பதில் விஜயசாந்தி அந்த கேரக்டரில் நடிப்பதற்கே குஷ்பு தான் காரணமாம். அவர் எதற்காக அப்படத்தில் கதாநாயகியாக நடிக்க மறுத்தார் என்பதைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஷாக் ஆன குஷ்பு
பி வாசு இயக்கத்தில் பிரபு - குஷ்பு நடித்த சின்னத்தம்பி திரைப்படம் மெகா ஹிட்டான சமயத்தில் ரஜினியை வைத்து மன்னன் என்கிற திரைப்படத்தை சிவாஜி கணேஷனின் தயாரிப்பில், பி வாசு இயக்க கமிட்டாகி இருந்தார். அப்போது ரஜினிக்கு சரிசமமான கெத்தோடு அப்படத்தில் வரும் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முதலில் அவர் மனதில் இருந்த கேரக்டர் குஷ்பு தான். அதனால் அந்த படத்தோட கதையை முதலில் குஷ்புவிடம் தான் சொல்லி இருக்கிறார் பி.வாசு. ஆனால் கதையைக் கேட்டு குஷ்பு ஷாக் ஆகிவிட்டாராம். கதை பிடித்திருந்தும் அதில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
ரஜினியை அடிக்க மாட்டேன்
தொழிலாளியாக வேலை பார்க்கும் ரஜினிகாந்தை குஷ்பு அறைவது போன்ற காட்சி படத்தில் இருக்கிறது என பி.வாசு சொன்னதும், அய்யய்யோ அந்த சீனில் தன்னால் நடிக்கவே முடியாது என சொல்லிவிட்டாராம். நீங்கள் ரஜினிகாந்துக்கு இணையாக பவர்ஃபுல்லான ஒரு நடிகையை போட்டால் தான், ஆடியன்ஸ் ஒத்துக் கொள்வார்கள். நான் ரஜினி சாரை அடித்தால் ஆடியன்ஸ் ஒத்துக்கவே மாட்டாங்க. சின்னத்தம்பி படத்தில் ஒரு குறும்புத்தனம் வாய்ந்த பெண்ணாக நடித்துவிட்டு, இப்படத்தில் ரஜினிக்கு நிகராக செம மாஸ் ஆன ஒரு ரோலில் நடித்தால் அது அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறி இருக்கிறார் குஷ்பு.
சின்ன ரோலில் நடிக்க ஆசைப்பட்ட குஷ்பு
அதுமட்டுமின்றி நான் ரஜினி சாரை அடித்தால் அவருடைய ரசிகர்கள் தியேட்டரில் ஸ்கிரீனையே கிழிச்சிருவாங்க. ஏன்னா ரஜினிகாந்தின் ரசிகர்கள் அந்த அளவுக்கு அவர்மேல் பாசம் வைத்திருக்கிறார்கள். குஷ்புவின் விளக்கத்தை கேட்ட இயக்குநர் பி.வாசுவுக்கு அது சரியானதாக இருந்ததால், குஷ்புவுக்கு பதிலாக தெலுங்கில் அப்போது கொடிகட்டிப் பறந்த விஜயசாந்தியை அந்த கேரக்டரில் நடிக்க ஒப்பந்தம் செய்தார் பி.வாசு. தான் ஹீரோயினாக நடிக்காவிட்டாலும் தனக்கு இந்த கதை பிடித்திருப்பதால், அதில் ஏதாவது ஒரு சின்ன ரோலாவது கொடுங்கள் என இயக்குநரிடம் கேட்டாராம் குஷ்பு.
பி.வாசு புகழாரம்
குஷ்புவின் ஆசைக்கு இணங்க அவரை மன்னன் படத்தில் விஜயசாந்திக்கு பிஏ ஆகவும், ரஜினிகாந்தின் காதலியாகவும், நடித்து, சில சீன்களிலும், ஒரு டூயட் சாங்கிலும் தலைகாட்டி இருப்பார் குஷ்பு. இந்த விஷயத்தை பற்றி இயக்குநர் பி.வாசு ஒரு பேட்டியில் பேசும்போது, குஷ்பு என்னுடைய படத்தில் அதிகமாக நடிக்க காரணம் அவரிடம் சுத்தமாக ஈகோ இருக்காது. படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக மிகவும் முனைப்போடு வேலை பார்ப்பார் என கூறி இருக்கிறார். அதனால் நடிகை குஷ்பு தமிழ் சினிமா ரசிகர்கள் இதயத்தில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

