பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி கடந்த முறை தமிழிலும் - தெலுங்கிலும் ஒரே நாளில் துவங்கப்பட்டது. ஆனால் இந்த முறை பிக்பாஸ் சீசன் 3  நிகழ்ச்சி தமிழில் சற்று முன்னதாகவே ஆரபித்து விட்டனர் நிகழ்ச்சியாளர்கள்.

தெலுங்கில் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை பொறுத்தவரை, முதல் சீசனை பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கினார். இரண்டாவது சீசனை நானி தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் தெலுங்கு சீசன் 3  நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியும் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், நடிகர் தருண், பாடகர் ஹேமசந்திரா, தீன்மார்  சாவித்திரி, தொகுப்பாளினி உதய பானு, நடிகை ஸ்ரீரெட்டி, விவா ஹர்ஷா, கே.எ.பால் ,ஸ்ரீமுகி, மகாதள்ளி புகழ் ஜானவி, ரகு மாஸ்டர், பாடகர் ராகுல், வருண் சந்தோஷ்,  மற்றும் காமன் மேன் ஒருவர் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.