நடிகர் கார்த்தி, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் 'சுல்தான்'. இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ரஷ்மிகா மந்தனா. இந்நிலையில் இந்த படம் குறித்து பரவி வந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு.

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வருடம் வெளியான, 'கைதி', 'தம்பி' ஆகிய இரண்டு படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து தற்போது, 'சுல்தான்' என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று கொண்டிருந்த போது, கொரோனா பதிப்பின் காரணமாக அணைத்து பணிகளும் நிறுத்தப்பட்டு, படக்குழுவினர் சென்னை திரும்பினர். மேலும் 80 சதவீதத்திற்கும் மேல் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதால், கண்டிப்பாக இந்த வருடத்திலேயே படம் ரிலீசாகும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவித்தனர்.

ஆனால், திடீர் என யாரோ கொளுத்தி போட்ட வதந்தி கோலிவுட் திரையுலகில் தீயாக பரவியது... அதாவது, ’சுல்தான்’ திரைப்படத்தின் பணிகள் இன்னும் நிறைய காட்சிகள் படமாக்காமல் உள்ளதாகவும், இதனால் இந்த படம் 2021ஆம் ஆண்டு கோடை விடுமுறையில்தான் வெளிவரும் என்றும், ‘காஷ்மோரா’ போன்று இந்த படமும் ஃபேண்டஸி படம் என்றும், அதே போல்  இந்த படத்தில் இருந்து அனிருத் விலகிவிட்டதால் விவேக் மெர்வின் புதிய இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து தற்போது விளக்கம் கொடுத்துள்ள படத்தின்  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை என்று கூறி,  இப்படி பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.