Spyder movie In United States alone is released in more than 400 places
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் அமெரிக்காவில் மட்டும் 400-க்கும் அதிகமான இடங்களில் வெளியாக உள்ளது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஸ்பைடர்’.
இந்தப் படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த மாத கடைசியில் ‘ஸ்பைடர்’ வெளியாக இருக்கிறது.
இந்தப் படம், அமெரிக்காவில் மட்டும் 400-க்கும் அதிகமான இடங்களில் வெளியாகிறதாம்.
அமெரிக்காவிலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அங்கு வெளியாகவுள்ளது.
அங்கும், 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் தெலுங்கிலும், 160-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழிலும் திரையிடப்பட உள்ளது என்பது கொசுறு தகவல்.
