அதிகாலை காட்சி ரத்து.. விஜய் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.. ஆனா இதற்கு மட்டும் அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு!
தளபதி விஜய் அவர்களுடைய நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி உலக அளவில் லியோ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கான பிரத்யேக காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக விளங்கிவரும் தளபதி விஜய் அவர்களுடைய லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக தளபதி விஜய் அவர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திரைப்படத்திற்கான சிறப்பு காட்சிகள் திரையிட சில சட்ட சிக்கல்கள் இருந்து வந்த நிலையில் தற்பொழுது அந்த பிரத்தியேக காட்சிகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் வருகின்ற 19ஆம் தேதி காலை 9 மணிக்கும் 20, 21, 22, 23 மற்றும் அக்டோபர் 24 ஆகிய 6 தேதிகளில் லியோ திரைப்படத்தை தமிழகத்தில் 9 மணி ஸ்பெஷல் ஷோ அமைத்து திரையிடலாம் என்று தமிழக அரசு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில் லியோ திரைப்படத்திற்கு ஆறு சிறப்பு காட்சிகள் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் தளபதி விஜய் அவர்களுடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்றே கூறலாம். இந்திய சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து நடித்துள்ள லியோ திரைப்படம் சுமார் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த நிலையில் பின்னர் சில காரணங்களால் அது நடக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
புதிய விதிமுறைகள்
அக்டோபர் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை 6 நாட்கள் காலை 9 மணி சிறப்பு காட்சிகள் மூலம் லியோ திரைப்படத்தை திரையிட அனுமதி.
காலை 9 மணிக்கு ஷோக்கள் துவங்கி, இரவு 1.30 மணிக்கு கடைசி ஷோவை முடித்துக்கொள்ளவேண்டும் என்ற முக்கிய அறிவுறுத்தலோடு சிறப்பு காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினியின் தலைவர் 171 படத்தின் கதையை விஜய்யிடம் சொன்ன லோகேஷ் கனகராஜ்.. தளபதியின் ரியாக்ஷன் இதுதான்..