இரண்டாவது இன்னிங்ஸில் அடியெடுத்து வைத்தாலும் இன்னும் பிரேக் கிடைக்காமல் திணறி வரும் சிம்ரன் பேட்ட மூலம் வேடையாடலாம் என நம்பிக்கையோடு இருக்கிறார். 

செகண்ட் இன்னிங்ஸில் சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லியாக நடித்த அவரது சுருங்கிய தோல்களும், குழி விழுந்த கன்னங்களும் ரசிகர்களை அயற்சி அடையச் செய்தது. ஆனால், பேட்ட படத்தில் ரஜினிக்கு ஒரு ஜோடியாக வரும் சிம்ரனை ஒரு அழகு தேவதை போல படைத்திருக்கிறார்களாம். 

அது சமீபத்தில் வெளியான பேட்ட பட போஸ்டரிலும் பிரதிபலித்தது. பழைய சிம்ரனை சிக்கென கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள் என்பதை உணர முடிந்தது. பொதுவாக படத்தை எடுத்தபின் சம்பந்தப்பட்ட ஹீரோ முகத்திலிருக்கிற சுருக்கத்தை நீக்க ஸ்பெஷல் சி.ஜி செய்வார்கள். அப்படி செய்ய பெரிய தொகையாகும் என்பதால் ஹீரோவுக்கு மட்டும்தான் அது சாத்தியம். ஆனால், பேட்ட படத்தில் சிம்ரனுக்காகவும் ஸ்பெஷல் செலவு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான் எந்த மீடியாக்கள் மைக்கை நீட்டினாலும் பேட்ட படத்தை பற்றி அளவுக்கு அதிமாக புழந்து தள்ளி வருகிறார் சிம்ரன்.