special comments about Rajinikanth
சூப்பர் ஸ்டார்! டான் ஆப் இந்தியன் சினிமா! வசூல் மன்னன்!...என்று மிகப்பெரிய புகழை சம்பாதித்து வைத்திருந்தாலும் கூட விமர்சனத்தையும் ஏகத்துக்கும் சம்பாதித்தவர் ரஜினி.
அதில் சில...(அன்றிலிருந்து இன்று வரை)
* திரைக்கதையின் ஆரோக்கியத்துக்காக கூட கமர்ஷியலை கடந்து யதார்த்த காட்சிகளில் நடிக்க மாட்டார்.
* கோபத்திலிருந்தால் உதவி இயக்குநர்களை அடிக்க கூட தயங்க மாட்டார்.
.jpg)
* தனது டைம் முடிந்துவிட்டால் சட்டென்று மேக் அப்பை கலைத்துவிட்டு காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவார். இயக்குநரின் ஒப்புதலை கேட்பதோ, மறுநாள் சீன்ஸ் பற்றி தெரிந்து கொள்வதோ கூட கிடையாது.
* சம்பள விஷயத்தில் கறார் என்று சொல்லாவிட்டாலும் தெளிவாக இருந்து செட்டில் பண்ண வைத்துவிடுவார்.
* அதீத உரிமை எடுக்கும் ரசிகனை பொது இடத்தில் அடிக்கவும் யோசிக்க மாட்டார்.
* அரசியலுக்கு வருவதாக சொல்லியே பல காலமாய் ரசிகர்களையும், தமிழக மக்களையும் ஏமாற்றுகிறார்.
.jpg)
* புதிய படம் ரிலீஸாகையில் மட்டும் ரசிகனை நோக்கி குரல் கொடுப்பார்! அதை ஓட வைப்பதற்காக.
* கமர்ஷியல் படம் மட்டுமே இலக்கு! எனும் வறட்டு சித்தாந்தத்தை வைத்துக் கொண்டு ‘ஐயா, பாபநாசம்’ போன்ற அருமையான கதையம்சம் உள்ள படங்களை தவிர்த்தவர்.
* தான் சொன்னால் கேட்பார்கள் என்பதற்காக தனக்கு தோதான அரசியல் சூழ்நிலைக்கு ரசிகனும் உட்பட மறைமுகமாய் பிரஷர் கொடுப்பார்.
* 2.0, காலா இரண்டும் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், கமர்ஷியல் எண்ணத்திலேயே இப்போதெல்லாம் அடிக்கடி அரசியல் பேசுகிறார்.
.jpg)
* தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் செய்த அரசியல் வழி நியாயத்தில் 10%தை கூட ரஜினி செய்யவில்லை.
* தமிழ், தமிழ் என்று சொன்னாலும் கூட தனது முதலீட்டை அவர் கொட்டுவது முழுக்க முழுக்க கர்நாடகாவில்தான்.
* கண்மூடித்தனமான இந்துயிஸ ஆதரவில் இருக்கிறார்.
* தனது மகள்களின் திருமணத்துக்காக தான் சொன்னது போல் ரசிகர்களுக்கு ஒரு வாய் சோறு போடாதவர், தமிழகத்துக்கு என்னசெய்துவிட போகிறார்!?
.................. எனும் விமர்சனங்கள் அடிக்கடி எழுந்தன.
