தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தனது   மகன் சரணுடன் கலந்துகொண்ட பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அஜீத்தை சினிமாவில் முதன் முதலாக அறிமுகப்படுத்தியதே நான்தான் என்று தெரிவித்திருக்கிறார். மெட்ரிகுலேசன் படிக்கும்போது தனது மகன் அஜீத்தும் சரணும் கிளாஸ்மேட்ஸ் என்ற தகவலையும் எஸ்.பி.பி. அந்நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

அந்நிகழ்ச்சியில் அவர் மேலும் கூறியதாவது,’’ என் மகன் சரணும் அஜீத்தும் சின்ன வயசுல இருந்தே ஃப்ரண்ட்ஸ். மெட்ரிகுலேசன்ல ரெண்டுபேரும் ஆந்திராவுல ஒண்ணாதான் படிச்சாங்க. ஆரம்பத்துல சின்னச்சின்ன விளம்பரப்படங்கள்ல அஜித்துக்கு நடிக்க சான்ஸ் வரும்போது அவர் செண்டிமெண்டா சரணோட ட்ரெஸ்களைத்தான் போட்டுட்டுப்போவார்.

அவரோட முதல் தெலுங்குப் படமான ‘ப்ரேம புஸ்தகம்’ படத்துல நான் தான் அவர முதன்முதலா அறிமுகப்படுத்துனேன். ஒரு நடிகரா அவர் கிட்ட எனக்குப் பிடிச்ச விஷயங்கள் மீடியாகிட்ட பேட்டிகள் எதுவும் கொடுக்காம ஒதுங்கி இருக்கிறது. அதே மாதிரி சோஷியல் மீடியாவுலயும் எந்த வம்புக்கும் போகாதவர் அஜீத். முந்தியாவது பைக் ரேஸ், கார் ரேஸுன்னு சுத்திட்டு இருந்தவர் இப்ப அதையும் விட்டுட்டு சினிமா குடும்பம்னு அழகா வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்கார்’ என்று அஜித்தை அல்டிமேட்டாக புகழ்ந்து தள்ளுகிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.