எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த மாதம் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். இவருக்கு அப்போதில் இருந்து தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதன்பின் கடந்த வாரம் திங்கள் கிழமை கொரோனாவில் இருந்து எஸ்.பி பாலசுப்பிரமணியம் குணமடைந்தார். சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா நெகட்டிவ் என்று வந்தது.

எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவருடைய மகன் எஸ்.பி.பி.சரண் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சரண் வெளியிட்ட வீடியோவில், எஸ்.பி.பி கொஞ்சம் கொஞ்சமாக பேச தொடங்கி உள்ளார். முழுமையாக அவருக்கு சுயநினைவு திரும்பி உள்ளது. எல்லோரையும் அடையாளம் காண தொடங்கி உள்ளார். பிஸியோ சிகிச்சைக்கு அவரின் உடல் ஒத்துழைக்கிறது. மருத்துவர்களின் உதவியுடன் 15-20 நிமிடங்கள் எழுந்து அமர்கிறார். வரும் நாட்களில் நீண்ட நேரம் அவர் உட்கார வாய்ப்புள்ளது. மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என நல்ல செய்தி கூறியிருந்தார்.

இதையும் படிங்க: சீரியலில் இருந்து விலகுகிறாரா “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மீனா?... வெளியானது அதிரடி உண்மை...!
அதன் பின்னர் நீண்ட நாட்களுக்கு முன்பு இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு எஸ்.பி.பி.சரண் நல்ல செய்தி சொல்லி ரசிகர்களை குஷியாக்கியுள்ளார். நேற்றில் இருந்து உணவு எடுத்துக் கொள்கிறார் என்றும், மகன் எஸ்.பி. தொடர்ந்து அவருக்கு மருத்துவக்குழு தீவிர சிசிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் விரைந்து குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
