ரஜினியின் 2.ஓ பட டீசர், அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பே இன்று சமூக வலைதளங்களில் லீக் ஆனது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், காலா படத்தை தொடர்ந்து வெளியாகியுள்ளதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். 

இந்த படத்தின் டீசர் லீக்கானது குறித்து தயாரிப்பாளரும், ரஜினியின் மகளுமான சவுந்தர்யா ரஜினிகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பகுதியில் அவர் வெளியிட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்னரே ஆன்லைனில் படக்காட்சிகள் வெளியிடப்படுவது ஏற்றுக்கொள்ளவோ ஊக்குவிக்கவோ கூடாது. 

கடின உழைப்பு, முயற்சிகள், தயாரிப்பாளர்களின் உணர்வுகளை புறந்தள்ளி விட்டு, சில நொடி ஆர்வத்திற்காக படக்காட்சிகள் ஆன்லைனின் வெளியிடுவது மனசாட்சி இல்லாத செயல் என தெரிவித்துள்ளார்.