வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை வெற்றிகரமாக இயக்கி முடித்துள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசுகையில்,

இந்த திரைப்படம் மிகவும் நன்றாக வந்திருக்கிறது என்றும், இப்படத்தில் பெண்கள் எப்படி தைரியமாக இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் விதத்தில் நடிகை கஜோல் நடித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் அவர் மிக பெரிய நடிகையாக இருந்தாலும் அனைவரிடமும் அன்பாதான் பழகினார். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளதால் அனைவர் மத்தியிலும் மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இதை தொடர்ந்து பேசிய அவர் தமிழில் நடிகர் அஜித் மற்றும், தெலுங்கில் சிரஞ்சீவியை வைத்து இயக்க தனக்கு ஆர்வம் இருப்பதாக கூறினார். மேலும் தற்போது உலகநாயகனின் இரண்டு மகள்களும் திரைத்துறையில் நடிப்பில் சிறந்து விலகி வருகின்றனர்.

எனக்கும் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததாகவும், கதை பிடிக்காததால் நடிக்க முடியவில்லை... வரும் காலங்களில் நல்ல கதை அமைந்தால் நிச்சயம் நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்தின் அரசியல் வருகை பற்றி கேள்வி எழுப்பியதற்கு... தற்போதைக்கு அதுகுறித்து தன்னால் கூற முடியாது என்றும்... அப்பாவின் நெருங்கிய நண்பரான உலக நாயகன் அரசியலுக்கு வந்தால் குடும்பத்துடன் அதனை ஆதரிப்போம் என தெரிவித்துள்ளார்.