- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தங்கமயிலால் சீரழிந்த சரவணன் வாழ்க்கை: "மருமகனுக்கு இப்படி ஆகிடுச்சே.." - கதறி அழுத மாமன் பழனிவேல்!
தங்கமயிலால் சீரழிந்த சரவணன் வாழ்க்கை: "மருமகனுக்கு இப்படி ஆகிடுச்சே.." - கதறி அழுத மாமன் பழனிவேல்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 671ஆவது எபிசோடில் சரவணனுக்கு அவரது மாமன் பழனிவேல் ஆறுதல் சொல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 671ஆவது எபிசோடானது காந்திமதி ஸ்டோர்ஸ் ஓனர் பழனிவேல், சுகன்யா ஆகியோரது காட்சிகளுடன் தொடங்குகிறது. இதில், தனது அக்கா குடும்பத்தில் நடந்த பிரச்சனைகளை நினைத்து பழனிவேல் சோகமாகவே இருந்தார். அவரால் கடையில் இருக்க கூட முடியவில்லை. வேறு வழியில்லாமல் கட்டாயத்திற்காக கடையில் இருக்கிறார்.
சுகன்யா மற்றும் குமரவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்தில் நேர்ந்த அவமான்ங்களை சொல்லி பழனிவேலுவை கஷ்டபடுத்தினர். அதற்கு பழனிவேலுவோ இவ்வளவு ஏன் உன்னுடைய அப்பா, பெரியப்பா பேசாத பேச்சா, பண்ணாத அவமானங்களா என்று கேட்டார். மேலும், அன்று அப்படி பேசிய அண்ணன்கள் தான் இன்று வேறு மாதிரி பேசுகிறார்கள். அதே போன்று தான் இன்று அவர்கள் நடந்து கொள்வதை வைத்து அவர்களுக்கு என் மீது பாசம் இல்லை என்று நினைத்துவிட முடியாது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன். அதனால், அவர்களைப் பற்றி தனக்கு நன்கு தெரியும் என்றார்.
பின்னர் சரவணனுக்கு போன் போட அவர் எடுக்கவில்லை. ஆனால், அவராகவே பழனிவேல் மாமாவை தேடி வந்தார். இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மாமா என்னை ஏமாற்றிவிட்டார்கள் என்று சொல்லி சரவணன் பழனிவேலுவை கட்டிப்பிடித்து அழுதார்.
எனக்கு குழந்தை என்றால் ரொம்பவே பிடிக்கும். அதை சொல்லி ஏமாற்ற எப்படி அவர்களுக்கு மனசு வந்தது. தங்கமயில் தான் இப்படியெல்லாம் செய்யுமா என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என்று பழனி சொல்ல, அவள் தான் ஒன்னா நம்பர் அக்யூஸ்ட் என்றார். மாமா என்னை மன்னித்துவிடு மாமா, உன்னை ரொம்பவே கஷ்ட்ப்படுத்தியிருக்கிறேன். நான், எதுவாக இருந்தாலும் முதலில் உன்னிடம் தான் சொல்வேன் என்று சொல்லி பழனிவேலுவை கஷ்டப்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டார்.
பின்னர் கடைசியை அடைத்த பிறகு இரவு நாம் சந்தித்து பேசுவோம் மாமா என்று சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடைக்கு வந்த சரவணன் தனது தம்பி கதிரிடம் நாம் ஈவ்னிங் வெளியில் போகலாமா? மாமாவிடம் சொல்லியிருக்கிறேன். ஈவ்னிங் சந்தித்து பேசலாம் என்று கூறியுள்ளார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிந்தது. இனி நாளை என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.