- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்
Siragadikka Aasai : சிந்தாமணி ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட முத்து... ஏலத்தில் காத்திருந்த தரமான சம்பவம்
Siragadikka Aasai Serial Today Episode : சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி வீட்டை ஏலத்தில் கைப்பற்ற முனைப்பு காட்டிய நிலையில், அதற்கு முத்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Siragadikka Aasai Serial Today Episode
சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயாவின் வீட்டை ஏலத்தில் விடுவதற்காக சிந்தாமணி வந்து அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி முத்து பணத்தை ரெடி பண்ணியது அறிந்து, அதை அவரிடம் இருந்து அபேஸ் பண்ண தன்னுடைய ஆட்களையும் செட் பண்ணி வைத்திருந்தார். அவர் செட் பண்ணியபடியே மீனா பைக்கில் வரும் போது இரண்டு ரெளடிகள் அவரிடம் இருந்து ஒரு பேக்கை திருடிச் செல்கின்றனர். இதையடுத்து ஏலம் நடைபெறும் இடத்துக்கு செல்கிறார் மீனா. அதன்பின் இன்றைய எபிசோடில் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.
பணத்தை வாங்கிய முத்து
முத்து பைனான்சியரிடம் பணம் வாங்க காத்துக் கொண்டிருக்க, பணம் எடுத்து வந்த நபர் வரும் வழியில் போலீசில் மாட்டிக் கொண்டதாக தகவல் கிடைக்கிறது. இதனால் அதிரடி முடிவெடுக்கும் முத்து, நான் நேரிலேயே அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். போகும் வழியில் பணம் கொண்டு வந்த நபரை பார்த்து அவரிடம் இருந்து பணத்தை வாங்கிக் கொண்டு ஏலம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் முத்து. செல்லும் வழியில் மற்றுமொரு தடங்கல் ஏற்படுகிறது.
முத்துவுக்கு ஏற்பட்ட தடங்கல்
முத்து ஓட்டிச் சென்ற பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிடுகிறது. இதையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் முத்து குழம்பிப் போய் இருக்க, அந்த நேரம் பார்த்து ஒருவர் சைக்கிளில் பெட்ரோல் வாங்கிக் கொண்டு செல்கிறார். பின்னர் அவரிடம் தன்னுடைய அவரசத்தை எடுத்து சொல்லி அந்த பெட்ரோலை வாங்கி தன் வண்டியில் போட்டுக் கொண்டு கிளம்புகிறார் முத்து. மறுபுறம் ஏலத்தில் வீட்டை எடுக்க சிந்தாமணி 58 லட்சம் வரை பேரம் பேசுகிறார். அப்போது அவர் கேட்ட தொகையை இறுதி செய்ய, ஒரு தரம், ரெண்டு தரம், மூணு தரம் என சொல்லும் நேரத்தில் முத்து அங்கு வந்துவிடுகிறார்.
சிந்தாமணிக்கு ஆப்பு வைத்த முத்து
அவர் பணத்தை கொண்டு வந்து கொட்டி, இந்த வீட்டை ஏலத்தில் விட வேண்டாம், அவங்களுக்கு தேவையான பணம் மொத்தமும் இதில் இருக்கிறது. வேண்டுமென்றால் எண்ணிப் பாருங்கள் என சொல்கிறார். அவர்களும் எண்ணிப் பார்க்கையில், அதில் 28 லட்சம் இருக்கிறது. மொத்தம் 38 லட்சம் ஆச்சே என்ன ஏமாத்த பாக்குறீங்களா என சிந்தாமணி சொல்ல, அப்போது அண்ணாமலை கையில் இருந்த பேக்கை வாங்கி, அதில் இருந்து 10 லட்சத்தை எடுத்து கொடுக்கிறார் முத்து. அதைப் பார்த்ததும் சிந்தாமணியின் முகம் வாடிப் போகிறது.
வீட்டை மீட்ட மகிழ்ச்சியில் அண்ணாமலை குடும்பம்
பின்னர் அவரிடம் சென்று பேசும் முத்து, என்ன நம்ம திருடுன பணம் இங்க எப்படி வந்துச்சுனு யோசிக்கிறியா என கேட்கிறார். அதன்பின் நடந்தவற்றை எல்லாம் கூறுகிறார் முத்து. சிந்தாமணி ஏலம் விடுபவர்களிடம் வீட்டை நான் ஏலத்தில் எடுத்துவிட்டேன் அதனால் இவங்களுக்கு இந்த வீடு சொந்தமாகாது என சொல்லிப் பார்க்கிறார். அதற்கு அந்த அதிகாரிகள், அவர்கள் பணத்தை கட்ட இன்று வரை அவகாசம் இருக்கிறது. அதனால் இந்த வீடு அவர்களுக்கு தான் சொந்தம் என உத்தரவிடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. அதன்பின் என்ன ஆனது என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்ப்போம்.

