இந்த முறை இளைய மகளுக்காக.. மீண்டும் கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்? - தீயாய் பரவும் தகவல்!
Super Star Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ கதாபாத்திரத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படம் நாளை பிப்ரவரி 9ம் தேதி உலக அளவில் வெளியாகவுள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் திரைப்படம் நாளை பிப்ரவரி 9ம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் ஒரு Extended Cameo கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மொய்தின் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தின் நாயகர்களாக விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களான செந்தில், லிவிங்ஸ்டன் மாறும் தம்பி ராமையா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். நாளை பிப்ரவரி 9ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க உள்ள அடுத்த திரைப்படம் குறித்த சில தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரிக்க இருக்கும் அந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடைய ரசிகனான நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அவர்கள் கதையின் நாயகனாக நடிக்க உள்ளதாக குறிப்பிடுகிறது.
லால் சலாம் படத்தை போல ரஜினியின் இளைய மகள் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திலும் ஒரு சிறு கேமியோ கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.