கொரோனா ஊரடங்கு மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டு மொத்தமாக புரட்டி போட்டுள்ளது. எப்போதும் ஷூட்டிங், பட விழாக்கள் என பிசியாக இருந்த முன்னணி நடிகர்கள் முதல், கூலி தொழிலாளர்கள் வரை, வீட்டிலேயே முடங்கியுள்ளனர். பலர், சென்னையில் அதிகமாக கொரோனா தொற்று பரவுவதால், தங்களுடைய சொந்த கிராமங்களுக்கு சென்று, சொந்த பந்தங்களோடு வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் சூரி, கொரோனா பிரச்சனை துவங்கியதில் இருந்தே... குழந்தைகளுடன் பெற்றோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும், அவர்களுக்கு குடும்ப உறவுகள் பற்றி சொல்லித்தருவது அவசியம் என்றும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வந்தார்.

தற்போது லாக்டவுன் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ள இவர் தன்னுடைய கிராமத்தின் அழகை புகைப்படமாக எடுத்து ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார். அந்த வகையில் சூரி தற்போது தான் வளர்த்து வரும் கருப்பன் என்ற காளை மாட்டை கண்மாயில் குளிக்க வைத்து அழைத்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், ‘ஊரடங்குக்கு நடுவுல ஊரே அடங்கி நிக்கும் - எங்க "கருப்பன்" நடந்து போனா’ என்று குறிப்பிட்டுள்ளார். சூரியின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகிறார்கள். ஊரே அடங்கி நின்றாலும்... வளர்பவருக்கு அது குழந்தை என்பது, சூரி அழைத்து வருவதை பார்த்தாலே உங்களுக்கு தெரியும்.