பிரபல காமெடி நடிகர் சூரி தன்னுடைய மகனை குளிக்க வைத்தபடி வெளியிட்டுள்ள ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில், வைரலாகி வருகிறது. சற்று கோபமாகவும் பேசியுள்ள சூரி , அதே நேரத்தில் துப்புரவு பணி செய்பவர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் மனதார தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவில்...  தனது மகனை குளிப்பாட்டி கொண்டே...’ஐயா மோடி ஐயா உங்களை கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன், வீட்டு உள்ளே இருந்தால் கொரோனா கட்டுப்படும் என்று சொன்னீங்க. அது வாஸ்தவம், ஆனால் வீட்டுக்குள் இருந்தால் இந்த பக்கிகள் தொல்லை தாங்க முடியல. 

இன்னும் எவ்வளவு வேண்டுமானாலும் உதவி செய்கிறோம். எப்படியாவது அந்த கொரோனாவை வெளக்கமாத்தாலே அடித்து துரத்திடுங்கள்.

அந்த சீனா பிரதமருக்கு ஒரு போன் போட்டு கொரோனா பிரச்சினைக்கு காரணமாக இருந்த அந்த வவ்வாலையும் பாம்பையும் சாப்பிட்ட பக்கி பயல்களை இனிமேல் சாப்பிடுவியா என வெளக்கமாத்தாலே அடிக்க சொல்லுங்கள் என கூறியுள்ளார்.

அதே போல் இந்த வீடியோவில்... துப்புரவு பணி செய்து வருபவர்களுக்கு தன்னுடைய நன்றிகளையும் சூரி தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்களால் வைரலாக பார்க்கப்பட்டு வரும் அந்த வீடியோ இதோ...