soori and sivakarthikeyan speech in twitter

கதாநாயகனாக நடிக்க வாய்ப்புகள் வந்தும் அதனை தவிர்த்து விட்டு, காமெடி நடிகனாக மட்டும் தான் நடிப்பேன் என நடித்து வருகிறார் சூரி.

இவருடைய காமெடிகள் ஒரே மாதிரி இருக்கிறது என்று தோன்றினாலும், இவருடைய காமெடிக்கும் பல ரசிகர்கள் உள்ளார். பல முன்னணி நடிகர்கள் படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், தற்போது சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிகர் கார்த்தி நடித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படபிடிப்பு கிராமப்புறம் சார்ந்த இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறாது.

இந்த படப்பிடிப்பின் போது... நடிகர் சூரி வயதான பாட்டிக்களின் நடுவே நின்று செல்பி எடுத்து அதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 'இந்த வெள்ளந்தி சிரிப்பும் விளையாடுற தண்டட்டியும் தமிழ் மண்ணுக்கே உரிய அடையாளம். செல்ல அப்பத்தாக்களோடு ஒரு செல்பி...(கடைக்குட்டிசிங்கம் சூட்டிங் ஸ்பாட்) என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன்... 'என்ன சூரி அண்ணே கிளாஸ்மெட் கூட கெட் டூ கெதரா என கூற அதற்கு சூரி... யெஸ் யெஸ் என்னுடைய கிளாஸ்மெட் இல்லை என் டாடியுடைய கிளாஸ்மெட் பங்கு என கூறி பதிலடி கொடுதிருதார்.

Scroll to load tweet…
Scroll to load tweet…