sonam kappor share with sanitory napkin photo

நடிகர் தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்து கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்களால் அறியப்பட்டவர் நடிகை சோனம் கபூர். இவர் பாலிவுட் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் கடந்த ஆண்டு நடித்து. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான நீரஜா திரைப்படம் தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்த வாரம் 'PAD MAN' என்கிற பாலிவுட் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஹீரோவாக ரஜினிப்பட வில்லன் அக்ஷய் குமார் நடித்துள்ளார். மேலும் மற்றொரு கதாநாயகியாக நடிகை ராதிகா ஆப்தேவும் நடித்துள்ளார்.

அமிதாப்பச்சன் எழுதி இருக்கும் இந்த கதையை, நடிகர் அக்ஷய் குமாரின் மனைவி ட்விங்கில் கண்ணா தயாரிக்க, இயக்குனர் ஆர்.பால்கி இயக்கி இருக்கிறார்.

இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி தற்போது மும்முரமாக நடைப்பெற்று வருகிறது. இதற்காக நடிகை சோனம் கபூர், கையில் சேனிட்டரி நேப்கினை பிடித்தப்படி ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். 

மேலும் இந்த புகைப்படத்தை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து இதுபோல் புகைப்படம் எடுத்து வெளியிட தைரியம் இருக்கிறதா என சவால் விட்டுள்ளார். 

Scroll to load tweet…