மங்காத்தாவுக்கு பின் நான் நடித்த எந்தப்படமும் ஹிட்டாகவில்லை. எங்கேயோ தப்பு நடக்கிறது. அதை கண்டுபிடியுங்கள்

மங்காத்தாவுக்கு பின் நான் நடித்த எந்தப்படமும் ஹிட்டாகவில்லை. எங்கேயோ தப்பு நடக்கிறது. அதை கண்டுபிடியுங்கள்’என்று தனது அடிப்பொடிகளுக்கு அஜித் உத்தரவிட்டு இருப்பதாக ஒரு நாளிதழில் குட்டிச்செய்தி ஒன்று வெளியாகி இருந்தது. 

இந்த செய்தியை வைத்து #ஓடுனஒரேபடம்மங்காத்தா என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர். 

Scroll to load tweet…

அதேவேளை, '’துப்பாக்கி திரைப்படத்திற்கு பின் இன்றுவரை நல்ல திரைக்கதை விஜய்க்கு அமையவில்லை’ என அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதை சுட்டிக்காடி #ஓடுனஒரேபடம்துப்பாக்கி என்கிற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் சமூகவலைதளங்களில் அவ்வப்போது முட்டி மோதி வருகின்றனர். ஒருவரையொருவர் தரம் தாழ்த்தி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தப்போக்கு எப்போது மாறும் என்கிற எதிர்பார்பும் நடுநிலையாளர்களுக்கு இடியே எழுந்துள்ளது. 

Scroll to load tweet…