பிரபல நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான சோபியா ஹயாட் என்பவர், ஓம் என எழுத்து வரைய பட்ட சுவற்றின் முன் பின்னல் திரும்பி நின்று, தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை வெளியிடவே, இவருக்கு எதிராக நெட்டிசன்கள் பலர் கொந்தளித்தனர். இதை தொடர்ந்து அவர் தன்னை பெண் கடவுள் என கூறி வீடியோ வெளியிட்டு அனைவரையும்  அதிர்ச்சியடைய செய்துள்ளார்.

இந்தியில் பிரபல  நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கிய  பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் விளையாடிய பிரபலங்களில் ஒருவர், நடிகை சோபியா ஹயாட். 

இந்நிலையில் இவர், இந்து கடவுளை குறிப்பிடும் வார்த்தையாக நினைக்கும், ஓம் குறியீட்டின் முன்பு, நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

இதற்க்கு பலத்த கண்டனங்கள் எழவே... அதனை சமாளிக்கும் விதத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில், நான் எந்த மதத்தையும் எதிர்ப்பவர் அல்ல. சிலர் நிர்வாணத்தை வேறுவிதமான கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள். நான் ஒரு பெண் கடவுள் என... அடுக்கடுக்காக பேச்சிலேயே பல சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

மேலும் பலர் பெண் கடவுளின் நிர்வாணத்தை விரும்பாதவர்கள் என்றும்,  தன்னுடைய ரசிகர்களுக்கு மட்டுமே என்னுடைய நிர்வாண புகைப்படத்தை காட்ட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கழுத்தில் உத்திராச்சம் மாலை அணிந்து, விதவிதமான கெட்டப்பில் புகைப்படத்தையும், வீடியோவையும் வெளியிட்டு வருகிறார் சோபியா.