sodaku mela sodaku song need to translate in english said high court
சொடக்கு மேல சொடக்கு பாடலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது
அந்த பாடலில் இடம் பெற்று உள்ள "அதிகார திமிர விரட்டி விரட்டி வெளுக்க தோணுது" என்ற வரியை நீக்கக்கோரி சதீஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்
பொங்கலுக்கு வெளியான சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம். கீர்த்தி சுரேஷ், கார்த்திக், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள சொடக்கு மேலே சொடக்கு என தொடங்கும் பாடல் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

இந்நிலையில் இந்தப் பாடலில் உள்ள சில வரிகளை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த பாடலில் உள்ள "அதிகார திமிரை விரட்டி விரட்டி வெளுக்க தோணுது" என்ற வரிகள் வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது என கூறி அதிமுக நிர்வாகி சதீஷ் குமார் என்பவர் மனு கொடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது....

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,சொடக்கு மேல சொடக்கு பாடலை அங்கிலத்தில் மொழி பெயர்த்து தருமாறு சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது
