தனது படம் ரிலீஸ் ஆகும் போது, “என் கட்-அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு பதிலாக,  அப்பா அம்மாவுக்கு புது துணி எடுத்துக்கொடுக்கச் சொன்னார் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு. அந்த கருத்துக்கு ஆதரவு குவிந்த அதே நேரத்தில் கழுவி ஊத்தவும் தயங்கவில்லை மற்ற நடிகர்களின் ரசிகர்கள்.

அப்படி கழுவி ஊத்தும்போது, யங் சூப்பர்ஸ்டார் மனதை காயப்படுத்தியது என்னன்னா? ‘உங்களுக்கு இருக்கும் இரண்டு, மூன்று ரசிகர்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பு தேவையா?’  என மரண கலாய் கலாய்த்ததால் மனுஷன் ரொம்பவே நொந்துட்டாரு போல. இதனால் கடுப்பான அவரு அவசர அவசரமாக போனை விடுத்து வீடியோ ஒன்றை எடுத்தார் அதில், “எனக்கு இருக்கும் இரண்டு மூன்று ரசிகர்களுக்கு நான் கவலைப்படலாமா என்று சிலர் கேட்டதாக அறிகிறேன்.

எனக்கு இரண்டு மூன்று ரசிகர்கள்தான் இருக்கிறார்கள் என்றே வைத்துக்கொள்வோம். அந்த இரண்டு, மூன்று பேர் எனது "வந்தா ராஜாவாகத் தான் வருவேன்" படத்துக்கு வந்தா அண்டாவோட தான் வரணும் அட ஆமாங்க மிகப்பெரிய கட்-அவுட்களை வைத்தால் மட்டும் பத்தாது பால் ஊத்தணும் அதுவும் பெரிய சைஸ் அண்டாவில் தான் பால் கொண்டுவந்து பாலாபிஷேகம் செய்ய வேண்டும் என்று அந்த ரெண்டு மூணு ரசிகர்களுக்கு கட்டளையே போட்டுள்ளார்.

ஒரு நாளைக்கு முன்னாடி தான் தல அஜித் அவரோட ரசிகர்களுக்கு  தான் யாருடனும் மோத வரவில்லை என்று  தெரிவித்து தன்னையும், தன் படங்களையும் வேறு யாருடனும் ஒப்பிட வேண்டாம் எனவும், எனது ரசிகர்களிடம் எனது வேண்டுகோள் என்னவென்றால் நான் உங்களிடம் எதிர்பார்ப்பது எல்லாம் மாணவர்கள் தங்களது கல்வியில் கவனம் செலுத்துவதும், தொழில் மற்றும் பணியில் உள்ளோர் தங்களது கடமையை செவ்வனே செய்வதும், சட்டம்-ஒழுங்கை மதித்து நடந்துகொள்வதும், ஆரோக்கியத்தின் மீது கவனம் வைப்பதும்,

வேற்றுமை களைந்து ஒற்றுமையுடன் இருப்பதும், மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் ஆகியவை தான். அதுவே நீங்கள் எனக்கு செய்யும் அன்பு என்று அஜித் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த இந்த சமயத்தில்  அண்டாவை வைத்து மறைத்துவிடலாம் என பிளான் போட்ட சிம்புவிற்கு அசிங்கம் மிஞ்சியது.  தனது ரசிகர்களுக்கு வந்தா ராஜாவாகத் தான் வருவேன் படத்திற்கு வந்தா அண்டாவோட தான் வரணும் என கட்டளையிட்டதை  போறவன் வரவனெல்லாம் கழுவி கழுவி ஊத்தும் மேட்டரில் பதிலடி கொடுக்கமுடியாமல் திணறி வருகின்றனர் யங் சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பட்டாளம்.

அண்டாவோட  வந்து கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்யணும்னு சொன்ன ஒரு மணி நேரத்திலேயே சிம்புவுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் சங்கத்தினர் கண்டனம், மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு தொடருவோம் என எச்சரிக்கை வேற விட்டு கதிகலங்க வைத்தனர்.

அடுத்ததாக என்னென்ன நடந்துச்சி வாங்க அந்த கொடுமைய பார்க்கலாம்...