So far Heroine Kalakukana Ganga is now Director ...
நடிகை கங்கனா ரணாவத், இரண்டு தயாரிப்பாளர்களில் தயாரிக்கும் படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.
தமிழில் ஜெயம் ரவி நடித்த “தாம் தூம்” படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத்.
இங்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கல என்று பாலிவுட்டில் கால் பதித்தார். தற்போது அங்கு அவர் தான் முன்னணி கதாநாயகி. ஹீரோவுக்கு சமமா சம்பளம் வாங்குற ஹீரோயின்.
கங்கனா. தற்போது ஜான்சி ராணியின் வாழ்க்கை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் விரைவில் படம் இயக்க போவதாக கூறியுள்ளார் கங்கனா.
இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறியது.:
“விரைவில் நான் ஒரு படத்தை இயக்க உள்ளேன். அதில் நானே ஹீரோயினாகவும் நடிக்க உள்ளேன்” என்றார்.
இதனிடையே கங்கனா, தான் இயக்க உள்ள படம் தொடர்பாக இரண்டு தயாரிப்பாளர்களிடம் பேசியிருப்பதாகவும், அதற்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
