மிகத் தெளிவான் நடிப்பு. சேரனின் புகழை தெரிந்த அவர், சேரனின் பாசத்தை அவர் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார்  லாஸ்லியா, லாஸ்லியாவிற்கு என் தங்கை ஜூலி, எவ்வளவோ மேலானவர் எனக் கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்களை விட மூன்றாவது சீசன் பயங்கரமாக இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்கிறது.  கடந்த இரண்டு சீசன்களை போல இல்லாமல், மூன்றாவது சீசன் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீசனில் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா என அடுத்தடுத்து எவிக்ஷனில் வெளியேறினார். சரவணன் மற்றும்  மதுமிதா போட்டியின் விதியைமீறியதால் வெளியேற்றப்பட்டனர்.

வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த கஸ்தூரி போனவேகத்த்தில் ரிவீட் அடுத்து அனுப்பப்பட்டார் இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா ஆகிய 3 பேரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். 

இந்த நிலையில் 75 நாட்களை நெருங்கி விட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வார நாமினேஷனில் சேரன், லாஸ்லியா, ஷெரின், முகேன் மற்றும் கவின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் ஒன்றில் போட்டியாளராக இருந்த கவிஞர் சினேகன், பிக் பாஸ் சீசன் 3 குறித்தும் அதில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான லாஸ்லியாவை கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும், தனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிடித்தவர்கள் சேரன், வனிதா மற்றும் மாதமிதா என்று கூறியுள்ள அவர், லாஸ்லியாவை பற்றி ட்வீட் போட்டுள்ள அவர், மிகத் தெளிவான் நடிப்பு. சேரனின் புகழை தெரிந்த அவர், சேரனின் பாசத்தை அவர் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார் என்றும் விமர்சித்துள்ளார். அடுத்ததாக, லாஸ்லியாவிற்கு "என் தங்கை ஜூலி எவ்ளோவோ மேலானவர்" என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கடைசி டீவீட்டில்; "பிக் பாஸ்ஸில் வெற்றி பெற போட்டி போட்டு ஜெயிக்க முடியாமல், மக்கள் உணர்வுகளுடன் விளையாடி ஜெயிக்க முயற்சிக்கும் நரி தந்திரத்தை அவர் விட்டுவிட வேண்டும்" என்று கவினுக்கும் அட்வைஸ் செய்துள்ளார். முதல் சீசனில் வைத்தியம், ஆறுதல் , ரிலாக்ஸ்  என சொல்லி பெண்களை கட்டிப்பிடிப்பதை மட்டுமே வேலையாய் வைத்திருந்த நீங்க எங்க தலைவன் கவின், தலைவி லாஸ்லியாவை பற்றி பேச தகுதியே இல்லை என கலாய்த்து தள்ளியுள்ளனர்.