பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்கள் மனதையும் வென்ற ஓவியாவால், பிக் பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் போராடி தனிமை படுத்தப்பட்டு... காதல் தோல்வியால் மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறினார்.

பல ரசிகர்களும் மீண்டும் ஓவியா இந்த போட்டியில் பங்கேற்றக் வேண்டும் என்று தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவர் வெளியேறிய பின் தங்களுடைய தவறுகளை உணர ஆரம்பித்துள்ளனர் போட்டியாளர்களில் சிலர். இது குறித்து பிக் பாஸ் அறையில் பேசிய சினேகன் " தவறே செய்யாத ஓவியா வெளியேற முடிவெடுத்துள்ளார்". அந்த பெண்ணிடம் இது வரை எதுவும் தவறு என்று சுட்டி காட்டும் அளவிற்கு இருந்ததில்லை.

இதற்கு நானும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. அவள் காதலில் இவ்வளவு உண்மையானவளாக இருந்தவள் என்று தெரிந்திருந்தால் நாள் அவள் பக்கம் நிலையாக இருந்திருப்பேன். அன்பிற்காக ஏங்கிய ஒருவர் வெளியேறியுள்ளது மிகவும் வேதனையாக உள்ளது என்று கவிஞர் சினேகன் கதறி அழுதார். இதனை அகம் தொலைக்காட்சி மூலம் பார்த்த கமலஹாசனும் கண்கலங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.