snehan build new library

50-திற்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதி மிகவும் பிரபலமானவர் கவிஞர் சிநேகன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல தொலைகாட்சியில், நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் என்கிற நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் மூலம் ' கட்டிப்புடி வைத்தியர்' என்று இவரை பலர் கிண்டல் செய்தாலும் மிகவும், பாசமானவர், அன்பானவர் என்றும் அறிந்துகொண்டனர். மேலும் ஓவியா ஆர்மி போல் சிநேகன் ஆர்மி என ஒரு சில இளைஞர்கள் உருவாக்கி சிநேகனுக்கு ரசிகர்களாகவும் மாறிவிட்டனர்.இந்நிலையில் சிநேகன், பிக் பாஸ் வீட்டில் 100 நாட்கள் இருந்த போது... இறுதி நாளில் ஒரு வேளை இந்த நிகழ்ச்சியில் நான் வெற்றி பெற்றால் என்னுடைய சொந்த ஊருக்கு ஒரு நூலகம் கட்டி தருவேன் என்று கூறி இருந்தார்.

ஆனால் இறுதியில் இவர் இந்த நிகழ்ச்சியில் ரன்னராக அறிவிக்கப்பட்டார். எனினும் இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தன்னுடைய சொந்த ஊருக்கு நூலகம் கட்டித்தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த நூலகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க புத்தகங்கள் முதல் தற்போதைய நவீன புத்தகங்கள் வரை இடம்பெற உள்ளதாக கூறப்படுகிறது. சிநேகனின் இந்த முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.