sneha melt her body in sivakarthikeyan movie
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை சினேகா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ள சினேகாவுக்கு இயக்குனர் ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம்.
அந்த கண்டிஷன் சினேகா தனது உடல் எடையை பத்து கிலோ குறைக்க வேண்டும் என்பதுதான். கடந்த 2015ஆம் ஆண்டு சினேகாவுக்கு குழந்தை பிறந்த பின்னர் உடல் எடை அதிகரித்துவிட்டது.
ஆனால் இந்த படத்தில் அவர் 'ஸ்லிம் ஆக இருக்க வேண்டிய கேரக்டர் என்பதால் இயக்குனர் கண்டிப்பாக பத்து கிலோ எடையை குறைக்க வேண்டும் என்று கூறிவிட்டதால் தற்போது சினேகா அதற்கான முயற்சியில் ஈடுபட்டுவருகிறார்.
காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வரும் சினேகா தற்போது படாத பாடு பட்டு 7 கிலோ எடையை குறைத்துவிட்டதாகவும், இன்னும் ஒருசில நாட்களில் மேலும் மூன்று கிலோ எடையை குறைத்து படப்பிடிப்புக்கு தயாராகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர் ஜே பாலாஜி, சதீஷ் மற்றும் ரோபோ ஷங்கர் உள்பட பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வரும் 'வேலைக்காரன்' படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை 24ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
