snegan father enter in big boss home

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக, போட்டியாளர்களை பார்க்க அவர்களுடைய நெருங்கிய சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்கு வருகை கொடுத்து வருகின்றனர்.

ஏற்கனவே சினேகனை தவிர அனைத்து போட்டியாளர்களின் வீடுகளில் இருந்தும் சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் வந்து போட்டியாளர்களை சந்தித்துவிட்டு சென்றனர்.

இந்நிலையில் பாடலாசிரியர் கவிஞர் சினேகனின் தந்தை தள்ளாத வயதில் சினேகனை சந்திக்க பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்... இதுகுறித்து வெளியாகியுள்ள ப்ரோமோவில் தொகுப்பாளர் கமல்ஹாசன் 

விலகி வந்த இளையோர்... விரும்பி வந்த மூத்தோர்... சிலிர்த்த உணர்வுகள் ...குளிர்ந்த உறவுகள் என பேசி கவித்துவமாக சினேகன் மற்றும் அவருடைய தந்தைக்குள் இருந்த இடைவெளியையும், தற்போது இவர்களுக்குள் இருக்கும் அன்பையும் வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளார்.

பின் போட்டியாளர்கள் அனைவரும் சினேகனின் தந்தையை வரவேற்று உபசரித்து சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது போல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.