சர்ச்சைகளிம் மொத்த ஜங்சனாக மாறிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஆன்,பெண் பாகுபாடின்றி அனைவரும் சகட்டுமேனிக்கு தம் அடிப்பது பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில் ஒரு தனியார் அமைப்பு அங்கு தம் அடிக்க தடைகேட்டு வழக்கு தொடர உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சீசன் தொடங்கி தற்போது உள்ள மூன்றாவது சீசன் வரை போட்டியாளர்கள் புகைப்பிடிப்பதற்கு என்றே தனியாக ஒரு அறை கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு சீசன்களில் கழிவறைக்கு அருகில் இருந்த இந்த ஸ்மோக்கிங் ஏரியாவானது, தற்போது கார்டன் ஏரியாவில் ஒரு குகை போன்ற அமைப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் ஓவியா புகை பிடிப்பது மிகவும் சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வந்த நிலையில் கடந்த சீசனில் யாஷிகா ,வைஷ்ணவி, ஐஸ்வர்யா, மஹத் என்று பலரும் புகைபிடிப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. 

 ஆனால், இப்படி பொது நிகழ்ச்சியில் புகைப்பிடிப்பதற்கு என்றே தனியாக அமைக்கப்பட்டுள்ள இந்த அறை சட்டத்திற்கு புறம்பானது என்று பிக் பாஸ் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு அமைப்பின் முக்கிய உறுப்பினரான சிரில் அலெக்சாண்டர் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... section 4, COPTP, 2003 என்ற சட்டத்தின் படி ஹோட்டல் மற்றும் விமான நிலையங்களில் தான் புகை பிடிப்பதற்கு என்று தனியாக அறை ஒதுக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், உலகளவில் குழந்தைகளும் பொதுமக்களும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் இப்படி புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் தனியாக அறையை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு தவறான உதாரணம் ஆகும், மேலும் இது சட்டத்திற்கு விரோதமாகும் என்று குறிப்பிட்டபட்டுள்ளது.

 மேலும் ,இது குறித்த ஒரு புகார் கடிதத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கும் அதனைத் தொகுத்து வழங்கி வரும் மக்கள் நீதி மையத்தின் தலைவரான கமலுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் கமலே புகைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளருடன் சேர்ந்து புகை பிடிப்பதற்கு என்று போட்டியாளர்களுக்கு ஒரு தனியான அறையை உருவாக்கஉறுதுணையாக இருந்துள்ளார் என்று குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தம் அடிப்பது மட்டுமாவது தடை செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.