பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் அமித் ஷா தொடர்பாக அவதூறாக பேசிய வழக்கில் நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

 

மன்சூர் அலிகான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரையும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ஒருமையில் பேசியதாக சர்ச்சை பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக இந்து மக்கள் முன்னணி கட்சி சார்பில் சென்னை மத்தியக்குற்றப் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் மனுவில், மன்சூர் அலிகானின் சர்ச்சைக்குரிய பேட்டி யுடியூப்பில் வேகமாக டிரெண்டாகி வருவதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த புகாரை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மன்சூர் அலிகான் மீது பிரிவினையைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து, அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.