தமிழ் சினிமாவில் தடம் பதித்த இயக்குநர்களை பட்டியலிட்டால் தவிர்க்கவே முடியாத ஆளுமை எஸ்.ஜே.சூர்யா! விஜய், அஜித்...இருவரும் இன்று இந்த அளவுக்கு வேரூன்றி நிற்க இவரும் ஒரு காரணம். இத்தனைக்கும் இருவருக்கும் இவர் தந்தது தலா ஒரு படம்தான். 

ஆனால் ‘வாலி’க்கு முன் வாலிக்கு பின் என்று அஜித்தின் சினிமா கிராஃபையும், ‘குஷி’க்கு முன், குஷிக்கு பின் என்று விஜய்யின் லுக் மற்றும் பர்ஃபார்மென்ஸையும் மிக அழகாக பிரித்து அந்த அழகான மற்றும் ஆச்சரிய மாற்றங்களை சொல்லிவிட முடியும். 

இவரது படங்களில் ஆபாசம் அதிகம் என்று ஒரு பொதுவான ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் அதை அலட்சியமாக உதறித்தள்ளிவிட்டு இளம் சினிமா ரசிகர்களை தனது வித்தியாசமான மேக்கிங் மேஜிக்கால் கவர்ந்திருந்தார் எஸ்.ஜே.எஸ். 

நியூ படம் அவரது வாழ்க்கையை மாற்றியது. ஹீரோ அவதாரம் எடுத்தவர் சில மோசமான படங்களால் அதன் பின் சில வருடங்கள் காணாமல் போனார். பிறகு மீண்டும் ’நண்பன்’ மூலமாக உள்ளே வந்தவர் கார்த்திக் சுப்புராஜின் மோஸ்ட் எக்ஸ்பெக்டட் ‘இறைவி’யில் முக்கிய ரோல் செய்தார். இந்த படத்தின் ரிவியூ பலவிதமாக இருந்தாலும் கூட எஸ்.ஜே.எஸ்_ஸுக்கு இந்த படம் தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் கொடுத்திருக்கிறது. 

இதே சூடோடு செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எனும் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு அஸ்வின் சரவணனின் ‘இறாவாக்காலம்’, முடித்தவரை ஏ.ஆர்.முருகதாஸ் தனது ‘ஸ்பைடர்’ ப்ராஜெக்டில் கமிட் செய்தார். எஸ்.ஜே.எஸ்.ஸுக்கு தெலுங்கு சினிமாவில் ஒரு இயக்குநராக நல்ல ஓப்பனிங் இருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு என இரண்டு மார்க்கெட்டையும் சொல்லி வைத்து அடிக்க துடிக்கும் மகேஷ்பாபுவின் ‘ஸ்பைடர்’ நிச்சயம் எஸ்.ஜே.எஸ்.ஸுக்கு ஒரு பெரிய ஸ்பேசை தரும் என்கிறார்கள். 

இந்நிலையில் மீண்டும் தன் டார்லிங் ஹீரோ விஜய் உடன் ’மெர்சல்’ ப்ராஜெக்டில் கமிட் ஆனார். இதில் தளபதியின் மெயின் வில்லன் இவரே என்கிறார்கள். 

ஆக நடிகர் எஸ்.ஜே.சூர்யாவின் செகண்ட் இன்னிங்ஸ் இப்படி அதிரடி சரவெடியாக போய்க் கொண்டிருக்க, ‘போகன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கமிட் ஆகியிருக்கிறார் இவர். ஜெயம் ரவியின் ரோலை ரவி தேஜா ஏற்க, ஹன்ஸின் இடத்தில் தெலுங்கு நாயகியாக நம்ம ’மெட்ராஸ்’ கேத்தரின் தெரேஸா! தமிழ் ‘போகனை’ டைரக்ட் செய்த அதே லக்‌ஷ்மன் தான் தெலுங்கிலும் டைரக்டர். 

சரி, எஸ்.ஜே.சூர்யாவின் பார்ட் இதிலென்ன? என்கிறீர்களா! அவர்தானே இங்கே அர்விந்சாமி செய்த ரோலை அங்கே செய்யப்போகிறார். தமிழில் ச்சோ ஹாண்ட்ஸம் அர்விந்சாமி செய்த ஃப்ரீக்கி ரோலை எஸ்.ஜே.எஸ். தனது மிரட்டல் பாணியில் எப்படி ரீபிளேஸ் செய்யப்போகிறார் என்று பார்ப்போம்!