SJ Surya next movie : மாநாடு படத்தை தொடர்ந்து விஷாலின் 33 வது படத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிரூபித்தார்.
இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் வாய்ப்பு தேடி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் விஜய்க்கு வில்லனாக 'மெர்சல்' படத்தில் நடித்து மிரட்டிய காட்சிகள் ரசிகர்களிடம் அதிகம் ரசிக்கப்பட்டது. அதே போல், மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு படத்தில் எஸ் ஜே சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து ரசிகர்ளை பெரிதும் கவர்ந்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி நடிகர் விஷால் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மினி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் நடிகர் விஷாலின் 33வது திரைப்படத்திற்கு மார்க் அன்டனி என்று பெயரிட்டுள்ளனர். இத்திரைப்படத்தின் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியானது.
