'பேட்ட' படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 166 ஆவது படத்தை, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் ரஜினிகாந்த், அதிரடியான போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தற்போது படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அண்மையில், இந்த படத்தின் போட்டோ ஷூட்டில் ரஜினி கலந்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்தது.

இதை தொடர்ந்து தற்போது, இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஏற்கனவே மெர்சல், மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்' உள்ளிட்ட படங்களில் தன்னுடைய அதிரடியான வில்லத்தனத்தை வெளிப்படுத்திய நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யாதான் வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து எந்த அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை. 

தற்போது இவர், பாலிவுட் சூப்பர் ஸ்டார் தமிழில் முதல் முறையாக அறிமுகமாகும் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.