SJ Surya join hands with karthick subburaju

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் மீண்டும் நடிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவருக்கு மிகப்பெரிய பெயர் கிடைத்தது.

‘இறைவி’ படம் தோல்வி அடைந்தாலும், நடிகராக அப்படம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பெரிய ‘பிரேக் பாயிண்ட்’தான்.

‘இறைவி’ படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா, ‘ஸ்பைடர்’, ‘மெர்சல்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து பாராட்டுகளை தட்டிச் சென்றார்.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘இறவாக்கலாம்’ ஆகிய படங்கள் விரைவில் வெளியாகின்றன.

இந்த நிலையில் மீண்டும் கார்த்திக் சுப்புராஜுடன் ஒரு படத்தில் இணைகிறார் எஸ.ஜே.சூர்யா.

கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை வேறு ஒருவர் இயக்குகிறாராம்.

இந்தப் படத்தின் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாபி சிம்ஹாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கால்ஷீட் கிடைக்காததால் கார்த்திக் சுப்பாரஜ் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ‘டிமான்டி காலனி’ படத்தில் நடித்த சனந்த் என்பவரை புக் செய்துள்ளார்.

படத்தை இயக்கப்போவது யார்? நடிகர்களின் கதாபாத்திரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.