குஷி, வாலி, போன்ற சிறந்த படங்களை இயக்கி தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்து காட்டிய எஸ்.ஜே.சூர்யா, 'இறைவி' படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராகவும் நிரூபித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு அடுக்கடுக்காக பல படங்களின் வாய்ப்பு தேடி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இவர் விஜய்க்கு வில்லனாக 'மெர்சல்' படத்தில் நடித்து மிரட்டிய காட்சிகள் ரசிகர்களிடம் அதிகம் ரசிக்கப்பட்டது. அதே போல், மகேஷ் பாபு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்த 'ஸ்பைடர்' படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் வெறித்தனமாக வில்லத்தனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா தற்போது அஜித், போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் வலிமை படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு வதந்தி வேகமாக பரவியது.

இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக சூர்யா, இதுவரை தன்னை 'வலிமை' படக்குழுவினர் யாரும் அணுகவில்லை என தெரிவித்துள்ளார். இதில் இருந்து இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்க வில்லை என்பது தெரிகிறது. 

மேலும் எஸ்.ஜே.சூர்யா இப்போது இயக்குறனர் ராதா மோகன் இயக்கத்தில், 'பொம்மை' என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக ஏற்கனவே 'மான்ஸ்டர்' படத்தில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பிரியா பவானி ஷங்கர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.