Six directors in the same film are playing the main character. What is that picture?

“நடிக்க கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா” என்னும் படத்தில் ஆறு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இயக்குனர்கள் படங்களில் நடிப்பது என்பது தமிழ் சினிமாவின் தொன்றுத் தொட்டு இருப்பதுதான்.

இந்தப் பழக்கம் முதல் தமிழ் இயக்குனரான கே.சுப்பிரமணியம் காலத்திலேயே தொடங்கிவிட்டது.

அப்போல்லாம் இயக்குனர்கள் எப்போதாவது நடிப்பார்கள். இப்போது எல்லா இயக்குனர்களுமே நடிக்க வந்து விடுகிறார்கள். இதற்கு பாரதிராஜா, பாலச்சந்தர்கூட விதிவிலக்கல்ல.

தற்போது ஆறு இயக்குனர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு படத்தில் நடிக்கின்றனர். அந்தப் படத்தின் பெயர் ‘நடிக்க கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.

இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார், ராஜ்கபூர், மன்சூரலிகான், அனுமோகன் என ஆறு இயக்குனர்கள் நடிக்கிறார்கள்.

இவர்கள் தவிர படத்தில் ஸ்வாதி, அஸ்மிதா, ரித்திஷ் விஷ்வா, ராஜ், திவ்யா என்ற புதுமுகங்களும் நடிக்கிறார்கள்.

படத்திற்கு ஸ்ரீகாந்த தேவா இசையமைக்கிறார். இந்த வித்தியாசமான படத்தை ராஜாக் இயக்குகிறார்.