Asianet News Tamil

பெரிய கோயிலுக்கு எதிராக பா.ரஞ்சித்தை தூண்டி விட்டதும் சிவகுமார் குடும்பமா..? அடங்காமல் மூளும் ஜோதிகா சர்ச்சை.!

தஞ்சை பெரியகோயிலை பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையாகி மூண்டு வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்  தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேச சிவக்குமார்தான் தூண்டியதாக இப்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
 

Sivakumars family after Pa Ranjith's provocation against a large temple ..? Jodhika controversy in silence.
Author
Tamil Nadu, First Published Apr 30, 2020, 10:58 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தஞ்சை பெரியகோயிலை பற்றி ஜோதிகா பேசியது சர்ச்சையாகி மூண்டு வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித்  தஞ்சை பெரிய கோயிலை பற்றி பேச சிவக்குமார்தான் தூண்டியதாக இப்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

தஞ்சை பெரிய கோயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளை உருவாக்குவதில் முன்னெடுக்கலாம் என நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னதாக இயக்குநர் பா.ரஞ்சித், தஞ்சை பெரிய கோயில் சொத்துக்கள் தங்களது பூர்விக குடிகளுக்கு சொந்தமானது. எங்களது தாத்தா, முப்பாட்டன்கள் சொத்தை ராஜராஜசோழன் அபகரித்து விட்டார் என பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த இரண்டு சர்ச்சைகளுக்கும் இப்போது முடிச்சுப்போட்டு கருத்துக்களை கூறிவருகிறார்கள் பலரும்.

இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் சொஹைல் என்பவர் பதிவிட்டுள்ளார். அதில், ’’சிவகுமாரின் முகத்திரை கிழிகிறது. "தஞ்சாவூர் சிவலிங்கத்தை கொத்தி கொத்தி செய்த சிற்பி கோயிலுக்கு போக இயலவில்லை. இந்த தீண்டாமையால் சிறு வயது முதல் நான் கோயிலுக்கு போவது இல்லை" என்றார் நடிகர் சிவகுமார்.

பண்ணாரி எஸ்.வி.பாலசுப்ரமணியம் மற்றும் அவரது நலம் விரும்பி தற்போது 100 வது கிளை தொடங்கி உள்ள ராம்ராஜ் வேஷ்டி நாகராஜன்  உடன் கொங்கு மண்டலத்தை அழிக்க உருவாக்கப்பட்ட நடிகர் சிவக்குமார். அதிர்ச்சியாக உள்ளதா? இன்னும் காத்திருக்கிறது...வாருங்கள்.

இந்த ராம்ராஜ் வேஷ்டி நாகராஜன் தான் நடிகர் சிவக்குமார் மூலமாக ரஜினிகாந்த்தை வைத்து காலா, கபாலி போன்ற பெயர்களை உபயோகித்து தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்களை சீரழிக்க வந்து உள்ள மேசானிய சினிமா கும்பல். நடிகன் சிவகுமார்தான் இதன் மூளை.

நடிகர் சிவக்குமாரின் சிபாரிசுதான் பா.ரஞ்சித். பா.ரஞ்சித்தை வைத்துதான் ராஜ ராஜ சோழனை பேச வைத்தவர் நடிகர் சிவக்குமார். அதன் தொடர்ச்சியே தற்போது தஞ்சாவூரைப் பற்றி நடிகர் சிவக்குமார் பேசும் காரணம். நடிகர் சிவக்குமார் மேற்கூறிய சிலை கடத்தல் கும்பல் சேர்ந்த நடத்தும் ஜெகத் கஸ்பாரின் மனவளக்கலை மன்றம் போன்ற திருட்டு கும்பல்கள் உடன் இணைந்து பேசிக் கொண்டே கோவிலுக்கு போவதில்லை என்று சொல்வது ஏனப்பா??

ஒரு காலத்தில் காசுக்காகவும், கலாச்சாரத்தை கெடுக்கவும் மேசானியர்களின் கட்டுபாட்டில் 'ரோசாப்பூ ரவிக்கைகாரி' போன்ற படங்களில் நடித்து இப்போது ராமாயணம் பேசுபவர் நீங்கள்தானே சிவக்குமார்.  என் ராஜா சோழன் கட்டிய கோயிலை பேசி விட்டீர். நீ எப்படி என்று ஊரும், உன்னை ஈன்ற சமுதாயமும் தெரிய வேண்டாமாப்பா சிவக்குமார். 

உங்கள் மூத்த மகன் சூர்யா என்ற சரவணனுக்கு உங்கள் குல தெய்வமான காங்கேயம் அருகே உள்ள காடையூரை தேடிக் கண்டு பிடித்து சீர் செய்து,காது குத்தி, மொட்டை அடித்தது பற்றி நீங்கள் ஆனந்த விகடனில் எழுதி இருந்தீர்களே...அது கோயிலா? இல்லையா?

உங்கள் குல தெய்வமான காடையூர் கோயில் வீர பாண்டிய மன்னனால் கட்டப் பட்டதா? இல்லையா? 3. வீர பாண்டிய மன்னன் நியமித்த குருக்கள் பிராமணரான ஸ்ரீலஸ்ரீ மீனாட்சி சைவ புரந்தர பண்டித குரு ஸ்வாமிகளிடம் காடையூர் கோயிலில் பிரசாதம் பெற்றீர்களே!! அது தீண்டாமை இல்லையா?.

உங்கள் மூத்த மகன் சூர்யா என்ற சரவணன் சதானாஹ் என்ற உண்மை பெயர் கொண்ட நடிகை ஜோதிகா என்ற முஸ்லீமை திருமணம் செய்ய முயன்ற போது இரண்டு வருடம் இழுத்தடித்து பிரச்சனை செய்தீர்களே!! ஏன்?. இதைப் பற்றி கேள்வி கேட்ட ரிப்போர்ட்டரை கொங்கு மண்டலத்தில் உள்ள அத்தனை கெட்ட வார்த்தையை பிரயோஹம் செய்து ஆபாசமாக திட்டினீர்களே இது தீண்டாமையா? இல்லையா?.

சதானாஹ் என்ற உண்மை பெயர் கொண்ட நடிகை ஜோதிகா என்ற உங்கள் முஸ்லீம் மருமகளை ஏற்க மறுத்தது தீண்டாமையில் வருமா? வராதா?  இதற்கு பின்னர் சூர்யா என்ற சரணவனான உங்கள் மகன் ரெகுலராக தர்காக்களுக்கு சென்று நமாஸ் செய்வது உண்மையா? இல்லையா? இது அந்த தர்காவை வடிவமைத்த கொத்தனாருக்கு துரோகம் இல்லையாப்பா?

 

இப்படி நமாஸ் செய்யும் போது தர்காவில் உள்ள மஜார் என்ற கல்லறைக்கு பட்டுத் துணி சமர்ப்பிப்பது உங்கள் விருப்பத்தில் நடந்ததா? அப்படியானால் உங்கள் மகன் நேரடியாக துணியை சமர்ப்பித்தாரா? இல்லை அங்கு உள்ள முத்தாவல்லி என்ற மத குரு சமர்ப்பித்தாரா? இது உங்கள் பாஷையில் தஞ்சாவூர் கோவில் பாணி தீண்டாமை இல்லையா?

சதர் என்ற பட்டுத் துணியை சமர்ப்பிக்கும் போது சமர்ப்பித்தவர் பெயரில் முத்தாவல்லி மத குருவால் தொழுகை நடத்தப்படும். அப்போது தன் பெயரை சூர்யா என்றோ சரவணன் என்றோ சொல்லாமல் சம்சுதீன் என்று அவர்கள் சொல்லும் காரணம் என்ன ஆக்டர் சிவகுமார் அவர்களே.

உங்கள் மகன் அகரம் பவுண்டேஷன் என்ற அறக்கட்ளையை தொடங்கி அதன் மூலம் கத்தார் நாடு வழியாக பணம் ஃபோர்டு பவுண்டேஷனின் உதவி உடன் கோணக்கணக்கில் குவித்தது உண்மையா? இல்லையா? இதற்காக பிரதமர் நரேந்திர மோடி உங்களுக்கு வருமான வரி ரைடு விட்டாரே. அது உண்மையா? இல்லையா?.

பிரதமர் மோடி பிரதமர் ஆவதற்கு முன் அவர் துக்ளக் விழாவிற்கு வந்த போது குருமூர்த்தியை மூலமாக முதல் வரிசையில் அமர்ந்து கை தட்டி ஜால்ரா அடித்தீர்கள். மீட்டிங் முடிந்த உடன் உங்கள் மகன் சூர்யாவை பாஜகவில் சேர்க்க வேண்டுகோள் வைத்தீர்களே. அது உண்மையா? இல்லையா? மோடி பிரதமர் ஆன பிறகு உங்களுக்கும் ,தாவூத் இப்ராஹிம்கும் உள்ள கனைக்‌ஷன் ரைடு மூலமாக வெளியே கொண்டு வத்த போது ஆத்திரத்தில் டிகிரி கூட முடிக்காத உங்கள் மகன் என்ன மயிற்றுக்கு நீட் எழுத வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜாடை போட்டது உண்மையா? இல்லையா?.

உங்கள் மகன் சூர்யாவுக்கு மொட்டை அடித்த உடன் வீரபாண்டிய மன்னன் கட்டிய உங்கள் குல தெய்வக் காடையூர் கோயிலை ஊர் மக்களை ஏமாற்றி பிரீமேசன் சென்னை V.G.P.பன்னீர் செல்வத்திற்கு சிவ லிங்கம் உள்பட தூண்கள் உள்பட அக்கு வேர் ஆணி வேராக பிரித்து கோல்டன் பீச்சில் வைக்க விற்றவர்தான் நடிகர் சிவக்குமார் என்பதை நான் அறிந்து கொண்டேன். முஸ்லிம் மருமகள் ஜோதிகாவை என் வீட்டில் வைக்க மாட்டேன் என்று தனிக்குடித்தனம் வைத்தது தீண்டாமை இல்லையா சிவக்குமார்??

 தஞ்சாவூர் கோயிலில் உள்ள அர்ச்சகர்கள் குருக்கள் ஜாதியினர். இவர்களை கருவூர் சித்தரின் வழி காட்டுதலின் படி நியமித்தது ராஜ ராஜ சோழன். இவர்கள் வைதீக அந்தணர்கள் அல்ல. வைதீக அந்தணர்கள் கருவறையின் உள்ளே செல்ல முடியாது. அவ்வளவு ஏன்? பிற கோயில் குருக்களும் செல்ல முடியாது. பாரம்பரிய அனைத்து ஜாதி பூசாரிகளையும் இப்படி தீண்டாமை பேசி துரத்தினால்தான் கோயில் சிலைகளையும்,நகைகளையும் இன்னும் எளிதாக கொள்ளையடிக்க முடியும்.

கெட்டவைகளை தடுப்பது ராஜ ராஜ சோழர் உருவாக்கிய பிரகதீஸ்வரர் சக்திதான். அந்த முறையான பூஜையை நிறுத்த வேண்டும் என்று சிலை திருட்டு மலையாள மந்திரவாதியான சூனியக்காரன் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் பூத பிசாசு பிரசன்னம் பார்த்து சொன்னதில் பேரில்தான் உங்கள் மேசானிய சக்திகள் தொடர்ந்து பேசி வருகிறீர்கள். இது மேசானியர்களின் தஞ்சை மண்டல அழிப்பின் ஒரு பாகம்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கட்டுரையில் வரும் கருத்துகளும் ஏசியேநெட் இணையதளத்துக்கும் சம்பந்தம் அல்ல. முழுக்கமுழுக்க முகநூலில் சொஹைல் எழுதிய பதிவு

Follow Us:
Download App:
  • android
  • ios