சூர்யாவின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘காப்பான்’ படம் எப்படி? என்று கேட்டால், சிம்பிளாக ‘அஞ்சான் 2’ என்று பதில் வருகிறது ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்களிடம் இருந்து. ஆம் படம் செம்ம பணால் என்றுதான் விமர்சனங்கள் சொல்கின்றன. 

ஆக்சுவலாக இந்தப் படத்தின் வெற்றியை பெரிதும் எதிர்பார்த்துக் கிடந்தார் சூர்யா. காரணம் சமீப வருடங்களில் அவரது எந்தப் படமும் ஓடவேயில்லை. மாஸ், சிங்கம் 3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே. என்று தொடர் தோல்விகள் மனுஷனுக்கு. அதனால் தனது ஃபேவரைட் இயக்குநரான கே.வி.ஆனந்தின் இயக்கத்தில் மோகன் லால், ஆர்யா, சாயிஷா, ஹாரீஸ் ஜெயராஜ் இசை என்று செம்ம காம்போவில் வெளியான படம் இது. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரத்தில் ‘புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக’ சூர்யா பேசியதெல்லாம் கூட இந்தப் படத்தின் ப்ரமோஷனே! என்றார்கள். 

இவ்வளவு மெனெக்கெட்டல்களுடன் வந்த இந்தப் படம் ஊத்திக் கொண்டதாகவே சொல்கிறார்கள் விமர்சகர்கள். சூர்யா செம்ம அப்செட்டாம். 
இந்த சூழலில் திறமையான, இளமையான நடிகர் சூர்யாவின் படங்கள் தொடர்ந்து அடிபட காரணமாக கோடம்பாகத்தில் வலம் வரும் சென்டிமெண்ட் கருத்துக்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கின்றன. அப்படி என்ன கருத்து என்று கேட்டபோது .... “சூர்யா மட்டுமல்ல அந்த குடும்பத்தில் ஜோதிகா, கார்த்தி என்று யார் படமும் சமீப வருடங்களாக ஓடவேயில்லை. ஜோதிகாவுக்கு தொடர்ந்து லோ பட்ஜெட் படங்கள் வந்து கொண்டே இருக்கின்றன, நல்ல சப்ஜெக்ட்டுகளைத்தான் டீல் செய்கிறார். ஆனாலும் ஏன் ஓடவில்லை? கார்த்திக்கு ‘தேவ்’ செம்ம அடி. இந்த நிலையில் வர இருக்கும் ‘கைதி’ கூட ஒரு ஜனரஞ்சக சினிமா இல்லை. ஏதேதோ புதுமையாய் செய்து தப்பிக்க நினைக்கிறார். ஆக ஒட்டுமொத்தமாக இந்த குடும்பத்தின் படங்கள் ஓடாமல் போக ஒரே காரணம் சிவக்குமாரின் வாயும், கையும்தான். சமீப காலமாக பொது இடங்களில் மிக மூர்க்கமாக நடந்து கொள்கிறார் சிவகுமார். தன்னோடு செல்ஃபி எடுக்க முயலும் ரசிகர்களின் மொபைல் போனை தட்டி விட்டு உடைப்பது, அதன் பின்னும் ஆத்திரம் அடங்காமல் திட்டுவது! பல நூறு பேர் கூடியிருக்கும் பொது இடத்தில் ரசிகர்களை ‘கோமாளி பசங்களா!’ என்று திட்டியது. என ஓவராய்ப் பண்ணுகிறார். 

இந்த கோமாளி ரசிகர்கள் இல்லமலா இவர் சினிமாவில் வளர்ந்தார், இவரது மகன்களும், மூத்த மருமகளும் வளர்ந்தது ரசிகர்களால்தானே! இன்று தமிழகத்திலேயே காஸ்ட்லியான திநகரில் பெரிய வீடோடு சிவகுமாரின் குடும்பம் வாழ யார் காரணம்? கோடான கோடி சொத்துக்களுடன் இவர்கள் செட்டிலாக யார் காரணம்? எல்லாமே இந்த கோமாளி ரசிகர்கள்தானே! ஆனால் நன்றி  மறந்து, தன்னையும் தன் குடும்பத்து நட்சத்திரங்களையும் ஏதோ தேவ தூதர்களாக நினைத்து சிவக்குமார் போடும் ஆட்டத்தினால்  விளைந்த சாபம் தான் அந்த குடும்பத்தை பாடாய்ப்படுத்துகிறது.

சிவக்குமார் திருந்தும் வரையில் அந்த குடும்ப நட்சத்திரங்கள் ஜொலிக்க மாட்டார்கள். எல்லாம் சாபம், சாபம்!” என்கிறார்கள் விமர்சகர்கள். கோடம்பாக்கம் முழுக்கவே இப்போது இந்த பேச்சுதான். இதெல்லாம் உண்மையா? என்று கேட்டால்... சென்டிமெண்டுகளால் நிறைந்ததுதானே கோடம்பாக்கம்! என்கிறார்கள். சர்தான்!