sivakartikeyan give the chance for releative

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு ஜம்ப் ஆகி பல ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில், 'சீமராஜா' மற்றும் ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களையும் தயாரிக்கும், 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் மற்றொரு படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

இந்த படத்தை, 'அருவி' படத்தை இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்த, இளம் இயக்குனர் அருண் பிரபு இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை நேற்று குமுளியில் போடப்பட்டு அதிகாரப் பூர்வ தகவல் வெளியிடப்பட்டது .

மேலும் 'அருவி' படத்தில் படத்தொகுப்பாளராக இருந்த ரேமண்ட் இந்த படத்திற்கும் படத்தொகுப்பு செய்கிறார். அதே போல் 'மேயாத மான்' படத்திற்கு இசையமைத்த பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்த படத்தில் சிவா கார்த்திகேயன் கமிட் ஆக காரணம், இயக்குனர் அருண் பிரபு 'அருவி' என்கிற வெற்றி படத்தை கொடுத்தது மட்டும் காரணம் இல்லையாம், இவர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய உறவினர் என்பதால் என கிசுகிசுக்கப்படுகிறது.