Asianet News TamilAsianet News Tamil

நீங்க தான் ரியல் ஹீரோ... கிரிக்கெட் வீரர் அஷ்வினை புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்..!

கிரிக்கெட் வீரர் அஷ்வினை, நீங்கள் தான் ரியல் ஹீரோ என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ள பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
 

sivakarthikeyan wish the cricket player ashwin viral twit
Author
Chennai, First Published Feb 17, 2021, 10:55 AM IST

கிரிக்கெட் வீரர் அஷ்வினை, நீங்கள் தான் ரியல் ஹீரோ என நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டியுள்ள பதிவிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின். 

sivakarthikeyan wish the cricket player ashwin viral twit

சொந்த மண்ணில் அஷ்வினின் அபார விளையாட்டை பார்த்து, இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உச்சி குளிர்ந்து போனார்கள் .  மேலும் அஸ்வினுக்கு விதவிதமான மாஸ் போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

ரசிகர்களின் அன்பிற்கும், பாராட்டுகளும் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார் அஸ்வின்.  அதில் நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. கடந்த சில நாட்களாக என்னை விரும்பிய அனைவருக்கும் நான் மிகவும் நன்றி உள்ளவனாக இருப்பேன். என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

sivakarthikeyan wish the cricket player ashwin viral twit

இந்த டுவிட்டிற்கு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் , ‘ப்ரோ, நீங்கள் தான் உண்மையான ஹீரோ. இந்த மைதானத்தில் உங்களுடைய செஞ்சுரியை பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் இன்னும் உற்சாகமான விளையாட்டை வெளிப்படுத்த வேண்டும். என ட்விட் செய்திருந்தார். ரசிகர்கள் தங்களுடைய லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios