தமிழ் சினிமாவில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் அதிகம் பேசப்பட்ட ஒரு படம் என்றால் அது விவேகம் படத்தை பற்றி தான். அந்த அளவிற்கு அஜித்தின் ரசிகர்களும், பிரபலங்களும் இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருந்தனர். 

தற்போது இந்த திரைப்படம் வெளியாகி வசூலில் தூள் கிளப்பி வருகிறது, இந்நிலையில் இந்த படத்தை பிரபல நடிகரும் அஜித்தின் தீவிர ரசிகருமான சிவகார்த்திகேயன் பார்த்து விட்டு தன்னுடைய கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பது,  Hatsoff தல, படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். சண்டை காட்சிகள் வெறித்தனம் என டுவிட் செய்துள்ளார். இதன் மூலம் சண்டை காட்சிகளில் தல தூள் கிளப்பியுள்ளார் என தெரிகிறது.