"வீரமே ஜெயம்".. முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்.. மாவீரன் படத்தில் வரும் God Voice - குரல் கொடுத்தது அவரே தான்!
இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தில் இருந்து ஒரு Surprise வெளியிடப்படவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது.

சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. இன்னும் மூன்று நாட்களில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் பெங்களூர், ஹைதராபாத், மலேசியா, துபாய் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் என்று இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் மற்றும் பிற படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தில் இருந்து ஒரு Surprise வெளியிடப்படவுள்ளதாக படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. அந்த வகையில் தற்போது அந்த Surprise வெளியாகியுள்ளது, மாவீரன் படத்தில் அவ்வப்போது வானை நோக்கி பார்க்கும் சிவகார்த்திகேயன், அங்கிருந்து வரும் ஒரு குரலை கேட்டுத்தான் அனைத்தையும் செய்கின்றார் என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
அந்த God Voice நடிகர் தனுஷின் குரலா? அல்லது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலா? என்று ரசிகர்கள் குழப்பத்திலிருந்து நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் மாவீரன் படத்தில் குரல் வழி இணைந்திருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார்.
வீரமே ஜெயம் என்று விஜய் சேதுபதி பேசும் ஒரு சிறிய காணொளியையும் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். மடோன் அஸ்வின் இயக்கத்தில், அதிதி சங்கர், சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஜூலை 14ம் தேதி உலக அளவில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகும்.
ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு... திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை!