"பன்னி கடிச்சா என்ன ஆகும் தெரியுமா?".. வம்பிழுத்த ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்த ஜி.பி.முத்து - வைரல் வீடியோ!
இந்த படத்திற்கான திரை விமர்சனத்தை கூறிய, ப்ளூ சட்டை மாறன் போட்ட வீடியோ தான் இப்பொது பிரச்சனையாக வெடித்துள்ளது.

டிக் டாக் பிரபலங்களில் பலர் இன்று திரைத்துறையில் நடிகர்களாக உருவெடுத்துள்ளது நாம் அறிந்ததே. அந்த வகையில் "செத்த பயலே", "நார பயலே" என்று பலரை திட்டியே இன்று பல லட்சம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் ஜி.பி முத்து. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் முன்பே திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் எம். செல்வகுமார் இயக்கத்தில் வெற்றி மற்றும் சிவானி நாராயணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியாகியுள்ள "பம்பர்" என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் ஜி.பி முத்து.
இந்நிலையில் இந்த படத்திற்கான திரை விமர்சனத்தை கூறிய ப்ளூ சட்டை மாறன் போட்ட வீடியோ தான் இப்பொது பிரச்சனையாக வெடித்துள்ளது. வழக்கம்போல படத்தில் உள்ள குறை நிறைகளை கூறி, இறுதியாக படம் ஓரளவுக்கு நன்றாக இருக்கிறது என்று கூறிய மாறன், படத்தில் ஆங்காங்கே குறுக்கே ஒரு பன்னி சென்று வருகிறது, அந்த பன்னியை கண்டுபிடித்து அப்போவே அடித்துக்கொன்றிருந்தால் இந்த படம் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்று கூறினார்.
உடனே அந்த படத்தில் நடித்த ஜி.பி முத்துவைத்தான், மாறன் பன்றி என்று குறிப்பிட்டுள்ளார் என்று ரசிகர்கள் கூற, உடனடியாக ஒரு வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிபி முத்து வெளியிட்டுள்ளார். அதில் என்னை பன்றி என்று மாறன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பன்றி கடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? கொத்தோடு புடுங்கிவிடும் என்று அவரும் சகட்டுமேனிக்கு மாறனை திட்ட, தற்பொழுது இன்ஸ்டாகிராமில் அவருடைய ரசிகர்கள் அவருக்கு சமாதானம் கூறி வரும் அதே நேரத்தில் ப்ளூ சட்டை மாறனை வறுத்தெடுத்து வருகின்றனர்.
முதல் முறையாக அரசியல் வருகை குறித்து அறிவித்த விஜய்! தளபதி நிர்வாகிகளிடம் பேசியது இது தான்!