'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இயக்குனரின் திருமணத்தில் திடீர் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் சர்ப்ரைஸ் பரிசு கொடுத்துள்ளார்.
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்தை முடித்துவிட்டு அதைத் தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனர் அசோக் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. நடிப்புடன் சேர்த்து தயாரிப்பு, பாடலாசிரியர், பாடகர் என பல ரோல்களை சிவகார்த்திகேயன் பணியாற்றி வருகிறார்.
2018-ம் ஆண்டு கனா படத்தின் மூலம் தயாரிப்பாளராக உருவெடுத்த எஸ்.கே... நெஞ்சமுண்டு நேர்மை உண்டு, டான், வாழ், உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். தற்போதும் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும், கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸும் இணைந்து டாக்டர் படத்தை தயாரித்துள்ளனர்.
இதில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான நெஞ்சமுண்டு நேரமைண்டு ஓடு ராஜா படத்தை யூடியூப் பிரபலம் கார்த்திக் வேணுகோபால் இயக்கியுள்ளார் . ரியோ ராஜ் நடித்த இப்படம் 2019ல் வெளியாகி வெற்றி பெற்றது.
இந்நிலையில் கார்த்திக் கடந்த நவம்பர் 15ம் தேதி கோவையில் திருமணம் செய்து கொண்டார். இதற்காக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நேரில் அழைப்பு விடுத்துள்ளார் கார்த்திக். ஆனால் படப்பிடிப்பில் பிஷியாக இருப்பதால் திருமணத்திற்கு வர இயலாது என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

ஆனால் கார்த்திக் திருமணத்தன்று நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். கோவையில் நடைபெற்ற திருமணத்திற்கு திடீர் என்ட்ரி கொடுத்த சிவகார்த்திகேயன் மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலியையும் பரிசாக அளித்துவிட்டு, முன் வந்து பொதுமக்களுடன் விருந்தில் அமர்ந்து உணவு அருந்திவிட்டு விடைபெற்றார்.
விறுவிறுப்பான திருமண விழாவின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், புதிதாக திருமணமான இயக்குனர் கார்த்திக் வேணுகோபால், நெஞ்சமுண்டு நேரமையுண்டு ஓடு ராஜா படத்திற்குப் பிறகு தனது இரண்டாவது படத்தைத் தொடங்க உள்ளார், இது சற்றே பிரமாண்டமான திட்டமாக இருக்கும். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தை திருமண பரிசாக கருதுவதாக இயக்குனர் குறிப்பிட்டு வருகிறார்.
