லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள டான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் டான். இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்திலும் இவர் தான் ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய், பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. 

இப்படத்தில் இடம்பெறும் ‘ஜலபுலஜங்கு’ என்கிற பாடல் சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது. இப்பாடலை அனிருத் பாடி உள்ளார். டான் படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதிய தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர்.

அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மாஸ் வீடியோ மூலம் டான் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற மார்ச் மாதம் 25-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். இதுதவிர விரைவில் டிரெய்லர், டீசர் குறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Scroll to load tweet…