நடிகர் சிவகார்த்திகேயன், பாலிவுட் சூப்பர் ஹீரோ சல்மான்கானுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு மறக்க முடியாத சந்திப்பு என கூறி, சல்மான் கானின் 'தபாங் 3 ' படத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து, குறுகிய நாட்களில் ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இவர் நடிப்பில் டிசம்பர் 20 ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் வெளியாக உள்ள திரைப்படம், 'ஹீரோ'. இதே நாளில் நடிகர் சல்மான் கான் நடித்த தபாங் 3 படமும் ரிலீசாக உள்ளது.

இவ்விரு படங்களையும் பிரமோஷன் செய்யும் விதத்தில் இருவரும் சந்தித்துள்ளனர். சூப்பர் ஹீரோ சல்மான்கானை சந்தித்தது தன்னால் மறக்க முடியாத ஒன்று என்றும், தன்னை ஊக்க படுத்தியதற்கு நன்றி, உங்களின் தபாங் 3 படத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற தன்னுடைய வாழ்த்துக்களையும் கூறியுள்ளார் சிவகார்த்திகேயன்.