இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் Mr.லோக்கல்.  இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவான கமெண்ட்ஸ்களை பெற்று வருகிறது.

விரைவில் வெளியாக உள்ள படம் இப்படத்தில்,  காமெடிக்கு சற்றும் குறைவில்லாமல் இயக்கியிருக்கிறார் இயக்குனர் ராஜேஷ். சந்தானம் இல்லாத குறையை யோகிபாபு தீர்த்து வைத்துள்ளார்.

ட்ரைலரின் ஆரம்பத்திலேயே அவனை எல்லாருக்கும் பிடிக்கும் என ராதிகா கூறுவது,  சிவகார்த்திகேயனுக்கு ட்ரைலரில் எதிர்பாராத ஒரு என்ட்ரி கொடுக்கபட்டுள்ளது. சிவர்த்திகேயன் காமெடி பட தேர்வுகளில் இப்படம் சற்று வித்தியாசமாக இருந்தாலும், ரசிகர்களில் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக  அமையும் என்பது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது.

சொடக்கு போட்டு கூப்பிடும் நயன்தாராவை,  இந்த வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் என சிவகார்த்திகேயன் மிரட்டுவது,   நயன்தாராவிடம் 20 / 20 கிரிக்கெட் மேட்ச் பற்றி பேசுவது, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாரா கோகென் விற்றதை வைத்து   கிண்டல் செய்வது என  விறுவிறு குறையாமல் வெளியாகியுள்ளது ட்ரைலர். சிவகார்த்திகேயன் நயன்தாராவும் கெத்து குறையாமல் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளும் இவரின் அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.

இந்த படத்தின் ட்ரைலர் இதோ: