இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில், நேற்றைய தினம் வெளியான திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்' . இந்த திரைப்படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தேசிய அளவிலான ஊடகங்கள் முதல் இந்த படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.

மேலும், சமந்தா மற்றும் விஜய் சேதுபதி இருவரும் துணிச்சலான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்ததற்காக பிரபலங்கள் முதல் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் முதலில் விஜய் சேதுபதி நடித்துள்ள ஷில்பா கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்த முன்னணி ஹீரோ குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதியை கமிட் செய்வதற்கு முன்பு  இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா, 'ரெமோ' படத்தில் பெண் வேடமிட்டு கலக்கிய சிவகார்த்திகேயனை தான் முதலில் அணுகினாராம். ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் சில காரணங்களால் இந்த படத்தை நிராகரித்துவிட்டார். பின்பு தான் இந்த கதையை விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார் இயக்குனர். 

இந்த படத்தின் கதை சர்ச்சையாக இருந்தாலும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார் விஜய் சேதுபதி . எனினும் இந்த படம் தற்போது வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்தின் கதையை மிஸ் செய்து விட்டேன் என கண்டிப்பாக சிவகார்த்திகேயன் வருந்துவார் என்பதே பலரது கருத்தாக உள்ளது.

மேலும் தொடர்ந்து, 'சூப்பர் டீலக்ஸ்' படம்,  நல்ல வரவேற்பு பெற்று வருவதால் திரையரங்குகள் அதிகரிக்கவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.