டான் படத்திலிருந்து பிரைவேட் பார்ட்டி என்னும் பாடல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள மூன்றாவது சிங்கிளை அரபிக் குத்து பாடலை பாடிய அனிரூத், ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தி தனது முதல் படமாக சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கி உள்ளார். டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள இப்படத்தின் டாக்டர் நாயகி பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். முன்னதாக ஜலபுல ஜங்கு மற்றும் பே ஆகிய 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின. அந்த இரண்டு பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...கிளாமரில் களமிறங்கிய கீர்த்தி சுரேஷ்.. வர வர கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கு..

படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்வதாக இருந்தனர். அன்றைய தினம் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் இப்படத்தின் ரிலீஸ் மாற்றப்பட்டது. பின்னர் வருகிற மே 13-ந் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தனர். டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கால் வைக்காமல் ஏணி ஏறும் சமந்தா..வேற லெவல் ஒர்கவுட் வீடியோ

இந்நிலையில் டான் படத்திலிருந்து பிரைவேட் பார்ட்டி என்னும் பாடல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள மூன்றாவது சிங்கிளை அரபிக் குத்து பாடலை பாடிய அனிரூத், ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

YouTube video player