Asianet News TamilAsianet News Tamil

சாதனை படைத்த சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா..! குவியும் ரசிகர்களின் வாழ்த்து..!

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை தயாரித்தது மட்டும் இன்றி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். 

sivakarthikeyan daughter aaradhana song get 1 million likes
Author
Chennai, First Published Jul 9, 2020, 5:56 PM IST

நடிகர் சிவகார்த்திகேயன் முதல் முறையாக தயாரிப்பாளராக அறிமுகமான திரைப்படம் 'கனா'. இந்த படத்தை தயாரித்தது மட்டும் இன்றி, ஒரு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடிய, 'வாயாடி பெத்த புள்ள' என்று தொடங்கும் லிரிக்கள் வீடியோ பாடல் வெளியிடப்பட்ட போதே... இரண்டே நாட்களில் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

sivakarthikeyan daughter aaradhana song get 1 million likes

தமிழ் சினிமாவில் நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகம் கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இந்த படத்தை இயக்கி இருந்தார். பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்திற்காக பல கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு நடித்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பட்ட கஷ்டத்துக்கு பலனாக இந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

sivakarthikeyan daughter aaradhana song get 1 million likes


மேலும், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடித்திருந்தார். திபு நைனன் தாமஸ் இசையமைக, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

sivakarthikeyan daughter aaradhana song get 1 million likes

இந்த படத்தை சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு வருடம் ஆகும் நிலையில், இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராத்யா பாடிய 'வாயாடி பெத்த புள்ள' பாடல், 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இதற்கு இவரை சிவகாத்திகேயன் ரசிகர்கள் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios